ஸ்ரீபிரடானா ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு…ரிம2.8மில்லியன்!

 

Hari Raya open-Najibகடந்த 2009 ஆண்டிலிருந்து ஸ்ரீபிரடானா ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்புக்கு அரசாங்கம் செலவிடும் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாதாரண குடிமக்களுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் இவ்வேளையில் பிரதமரும் அவரது அமைச்சர்களும் வீணாகச் செலவு செய்யக்கூடாது என்று பொக்கோ சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் கூறினார்.

pas-mapus omar, vpபாஸ் தகவல் பிரிவு தலைவருமான மாபுஸ் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு செலவு ஆண்டுதோறும் கூடியிருப்பதை சுட்டிக்காட்டினார்: 2009 ஆம் ஆண்டில் ரிம1.71மில்லியன்; 2010 இல் ரிம2.07மில்லியன்; 2011 இல் ரிம1.69மில்லியன்; 2012 இல் ரிம2.83மில்லியன்; மற்றும் 2013 இல் ரிம2.88மில்லியன்.

“இதற்கான அடிப்படை நியாயம் என்ன? அரசாங்கம் அல்லது பிரதமர்துறை பெற்ற உணவின் தரம் என்ன?, என்று அவர் வினவினார்.

பிரதமர்துறை அமைச்சர் ஷகிடான் அளித்த தகவல் அடிப்படையில் மாபுஸ் கருத்து தெரிவித்தார்.

இந்த திறந்த இல்ல உபசரிப்பில் அனைத்து இன மலேசியர்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணிகள், தூதர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் அரசாங்க இலாகாகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர் என்று ஷகிடான் மேலும் கூறியிருந்தார்.