மலேசிய விமான நிறுவத்தின் எம்எச்370 விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டியைக் கண்டெடுப்பது சிரமமான செயலாகும் என்கிறார் கருப்புப் பெட்டி தயாரித்த குழுவில் இடம்பெற்றிருந்த ஓர் அறிவியலாளர்.
“விழுந்தது எந்த இடம் எனத் தெரியாத நிலையில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பில், ஆழமான கடலில் கருப்புப் பெட்டியைக் கண்டெடுப்பது சாத்தியமற்றது என்றுதான் சொல்வேன்”, என பில் ஷோபீல்ட் சீனாவின் அதிகாரத்துவ செய்தி நிறுவனமான ஸின்ஹுவாவிடம் கூறியுள்ளார்.
ஷோபீல்ட், கருப்புப் பெட்டியை உருவாக்கிய ஆஸ்திரேலிய அறிவியலாளர் டேவிட் வாரனுடன் பணியாற்றிய ஆய்வாளர்களில் ஒருவர்.
இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக நம்பப்படும் எம்எச்370 விமானத்தைத் தேடுவதில் பன்னாட்டு விமானங்களும் கப்பல்களும் ஈடுபட்டுள்ளன. ஆனால், 24 நாள்களுக்குப் பின்னரும்கூட அதில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கடலுக்குள் சக்தி வாய்ந்த காந்த கல் (MAGNET ) போட்டு குடைந்து
பாருங்கள் கண்டிப்பாக ஒட்டிகொள்ளும். EASY …./////?????
தட்டுல சோறு இருத்த தான் சாப்பிடமுடியும்.