நஜிப்: நிதிப் பற்றாக்குறை என்பது கெடுதலான ஒன்றல்ல

najibஉள்நாட்டு  நிதிப்  பற்றாக்குறை  என்பது  கெடுதலான  ஒன்றல்ல  என்கிறார்  பிரதமரும்  நிதி  அமைச்சருமான  நஜிப்  அப்துல்  ரசாக். தேசிய  கடன்   பெருகி  வருவதை  எதிரணியினர்  குறைகூறி  இருப்பதற்கு  பிரதமர்  இவ்வாறு  கூறினார்.

அஹ்மட்  ஹம்சா (பிஎன் -ஜாசின்)வுக்குப்  பதிலளித்த  நஜிப், “1990-களின்  பிற்பகுதியிலிருந்து  நிதிநிலை  பற்றாக்குறையாகத்தான்  வந்துள்ளது.  ஆனாலும்,  அதனால்  நாட்டின்  வளர்ச்சி  பாதிப்புறவில்லை”, என்றார்.