ஐரின் தீமைகளை எதிர்த்தவர், தன்னலமற்று வாழ்ந்தவர்

1 ireneஉங்கள்  கருத்து: ‘அவர்  ஒருவர். ஆனால், பலரை  எதிர்த்து  நின்றார். அவர், மலைபோன்ற கோலியாத்தை எதிர்த்து  வென்ற   நவீன-கால  டேவிட்’

 

மூத்த சமூக  ஆர்வலர்  ஐரின்  ஃபெர்னாண்டஸ் மறைந்தார் 

 

அதிசயித்து  போனவன்:  தெனாகானிதா  தலைவர்  ஐரின்  பெர்னாண்டஸ்  அரிதினும்  அரிதாக வந்துதித்தவர். மலேசியா  பெற்றெடுத்த  வீரதீர  பெண்மணி.  ஊழல்  பேர்வழிகள்  தவிர்த்து  அனைத்து  மலேசுயர்களாலும்  மதிக்கப்படுபவர்.

ஐரின், உங்களை  எண்ணிப்  பெருமைப்படுகிறோம்.  உங்களுக்கு  எங்களின்  வீர  வணக்கம்.  உங்கள் ஆன்மா  சாந்தி  அடைக.

தலைவெட்டி:  ஐரின்  குடும்பதாருக்கு  என்  இரங்கல். அவர்  தலைசிறந்த  மலேசியர்.  மலேசியர்களுக்கு  உத்வேகம்  அளித்தவர். மனிதாபிமான  செயல்களில்  அயராது  ஈடுபட்டவர்.  முகாம்களில்  அடைக்கப்பட்டு  மறக்கப்பட்டவர்களாய்    வாடி  வதங்கிக்  கொண்டிருந்தவர்களுக்காக  தம்   வாழ்க்கையை   தியாகம்  செய்தவர். ஆனாலும்,  மலேசிய  அரசாங்கத்தின்  அங்கீகாரத்தைப்  பெறாதவர்.

ஆனால்,  அவ்வுலகில்  அவருக்கு  ஓர்  இடம்  இருக்கும்.

எட்சர்டர்: ஐரின்  மலேசியாவின்  தவப்புதல்வி, நீதிக்கும்  உண்மைக்கும்  சமத்துவத்துக்கும் போராடிய  வீராங்கனை.

ஆர்ஆர்:  முகாம்களில்  வதைக்கப்பட்ட  இந்தோனேசிய  குடிமக்களுக்காகக்  குரல்  கொடுத்தவர்  என்ற  முறையில்  இந்தோனேசிய  அரசாங்கம்  அவரைச்  சிறப்பிப்பது  பொருத்தமாக  இருக்கலாம்.

லிம் சொங் லியோங்: ஏழைகளுக்கு  அரசாங்கம்  இழைத்த  தீங்குகளை  அஞ்சா  நெஞ்சத்துடன்  எதிர்த்தவர்  ஐரின்.
அவர்  ஒருவர். ஆனால், பலரை  எதிர்த்து  நின்றார். அவர்,  கோலியாத்தை எதிர்த்து  நின்ற  நவீன-கால  டேவிட்.

டாக்டர்  சுரேஷ்: இறைவனுக்குச் செய்யும்  சேவைகளில்  சிறந்தது  அடிமட்டத்தில்  கிடக்கும்  எளிய  மக்களுக்குச்  சேவை  செய்வதுதான் என்பார்கள்.  இந்தச்  சேவையைச்  செய்து  அளவற்ற  மகிழ்ச்சியும்  மனநிறைவும்  கண்டவர்  ஐரின்.

அமெரிக்காவின் முதல்  பெண்மணியும் , எந்தெந்த  நாடுகளின்  தொழிலாளர்களுக்காக  அயராது  பாடுபட்டாரோ  அந்த  நாடுகளும்  சேர்ந்து அவரது  முன்மாதிரி  மனிதாபிமான பணியை  அங்கீகரிக்கும்  வகையில்  இறப்புக்குப்  பிந்திய  விருது  ஒன்றை  அவருக்கு  வழங்க  வேண்டும்.

கவனிப்பாளன்: அமலாக்கப்  பிரிவினர்,  எப்படியெல்லாம்  குடியேறிகளைக்  கொடுமைப்படுத்துகிறார்கள்,  அவர்களிடம்  கொள்ளையடிக்கிறார்கள்  என்பதை  ஐரின் அம்பலப்படுத்தியபோது டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  அமலாக்கப்  பிரிவினரைப்  பாதுகாப்பதற்காக,   உண்மையைச்  சொன்ன  ஐரின்மீது  இட்டுக்கட்டப்பட்ட  குற்றச்சாட்டுகளைச்  சுமத்தி  வழக்குமேல்  வழக்குகள்  தொடுத்து  பல  ஆண்டுகளாக  அவருக்குத்  தொல்லைமேல்  தொல்லை  கொடுத்தார்.

ஒங் குவான்  சின்: ஐரின், குரலற்றவர்களுக்காக  அயராது  குரல்  கொடுத்து  வந்தவர்.  சுரண்டப்பட்டவர்களுக்கு,  ஒதுக்கப்பட்டவர்களுக்காக  துணிச்சலுடன்  போராடியவர். அவரின்  பணி  என்றென்றும்  நினைவில்  நிற்கும்.