அமெரிக்காவின் சூப்பர் விமானம்கூட தடுமாறுகிறது

1 sarபரந்து  விரிந்த  இந்தியப்  பெருங்  கடலில்,  சுமார்  20  கப்பல்களும்  விமானங்களும்  எம்எச்370  விமானத்தைத்  தேடும்  பணியில்  ஈடுபட்டுள்ளன.  இவற்றில்  மிகவும்  நவீனமானது  அமெரிக்கக்  கடல்படையைச்  சேர்ந்த  பி-8  புசைடோன்
ரக  விமானமாகும்.

இது  அதிநவீன  கண்காணிப்புக்  கருவிகளைக்  கொண்ட  ஒரு  விமானம்.

இதன்  விலை  175 மில்லியன்  டாலர். உயர்-தொழில்நுட்ப  கேமிராக்கள், அகச் சிவப்பு  உணர்  கருவிகள்,  ரேடார்  கருவிகள்  முதலியவற்றைக்  கொண்ட  இவ்விமானம்  நீருக்கடியில்  பதுங்கியுள்ள  எதிரி  நீர்மூழ்கிக்  கப்பல்களை  எளிதாகக்  கண்டுபிடித்து  விடும்.

இந்த  விமானமும்,  எம்எச்370  மாயமாய்  மறைந்ததாக  நம்பப்படும்  பகுதிக்கு  உயரே  ஐந்து  மணி  நேரம்  வட்டமடித்துப்  பார்த்தது.  எதுவும்  புலப்படவில்லை.

அதன்  விமானி,  அமெரிக்கக்  கடல்படையின்  லெப்டனண்ட்  கமாண்டர் டேவிட்  மிம்ஸ், “நான்  இந்தியப்  பெருங்கடலுக்கு  வருவது  இதுவே  முதல்  தடவை.  இப்படி  ஒரு  பகுதியை  நான்  பார்த்ததில்லை”,  என ராய்ட்டர்சிடம்  கூறினார்.

“ஒரு  நிலப்  பகுதியைப்  பார்க்கவில்லை, கப்பல்களைப்  பார்கக  முடிவதில்லை. ஒன்றுமே  இல்லை. வினோதமான  பகுதி”,  என்றாரவர்.

“இவ்வளவு  பெரிய  கடலில்  தேடுவது  சவால்மிக்க  பணிதான்.  ஆனால்,  அது  இப்பகுதியில்  இருந்தால்  அதைக்  கண்டுபிடிக்கும் வாய்ப்பு  அதிகம்  என்றே  நினைக்கிறேன்”  என்றவர்  சொன்னார்.

– Reuters