எம்எச்370-இல் சிஐஏ, மோஸாட் போன்ற உளவு அமைப்புகளின் கையாள்கள் பயணம் செய்து சதிநாச வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று புரளிகள் பரப்பப்பட்டுவரும் வேளையில் பயணிகளில் எவரும் கடத்தலில் அல்லது கீழறுப்பு வேலைகளில் ஈடுபடவில்லை என்றும் அவர்களில் எவரும் ,மனநோய் பிரச்னைகளையோ தனிப்பட்ட பிரச்னைகளையோ கொண்டவர்கள் அல்லர் என்று போலீஸ் அறிவித்துள்ளது.
முன்சொன்ன நான்கு அம்சங்களின் அடிப்படையில் மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தில் பயணித்த 227 பயணிகள்மீது விசாரணை நடத்தியதில் அவர்கள்மீது சந்தேகம்கொள்ள எக்காரணமும் இல்லை என்பது தெளிவாகி இருப்பதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் இன்று கோலாலும்பூரில் தெரிவித்தார்.
ஆனால், விமானி, துணை விமானி உள்பட விமானப் பணியாளர்கள்மீது வீசாரணை தொடர்கிறது.
அந்த 2 பயணிகள் எப்படி?பாஸ் போட் இல்லாமல் பயணம் செய்தார்கள்,அப்படி பயணம் செய்வது தவறு இல்லையா?புடு ராயா பஸ் ஸ்டான்ட் இருந்து கோத்த ராயா பஸ் ஸ்டாண்டு இது பயணம் செய்வதற்கு.இந்த நாடில் இருந்து இன்னொரு நாடிற்கு பயணம்.இது தவறு இல்லையா?
அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு இருக்கிறார் நமது IGP ! திருட்டு கடபிதலில் இருவர் பயணம் செய்துள்ளனர் , திருடன் மீது சந்தேகம் இல்லையாம், ஆனால் விமானி , துணை விமானி விமான பணியாளர்கள் மீது விசாரணை !! கூர்கெட்ட கருது இது என்றே சொல்லவேண்டும் . எப்படி அவ்வளவு துல்லியமாக சொல்லிறார் ???
இதையே நாங்கள் சொன்னால் அதை என்றுக்கொள்வதில்லை !! உடலில் பச்சை குத்தியவர்கள் எல்லாம் குண்டர்களா ?? குற்றவாளிகளா ? என்ன காரணம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் அடித்து ,கொடுமை படுத்தி ,கேவலபடுத்தி பிறகு ஒன்றும்மில்லை என்று அனுப்பிவிடுகிறீர்கள் ! இந்த இரண்டு துடர்கள் பற்றி விசாரிக்க தேவையே இல்லை , காரணம் உண்மையான கிருமினல்கள்! IGP கு நல்லவர்கள் !!
MH 370 விமானம் கண்டு பிடிக்கபடாவிட்டால், சிஐஏ, மோஸாட் போன்ற உளவு அமைப்புகளின் சதிநாச வேலைதான் என்று இவரே அறிக்கை வெளியிடவும் தயங்க மாட்டார். மலேசிய அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை முரணான அறிக்கை விடுவதில் முந்திரி கொட்டைகள் ஆச்சே !!!!!!!