பக்காத்தான்: ‘பயணம் முடிவுற்றது’ என்று கூறியதன் பொருள் என்ன? விளக்கம் தேவை

explainபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  மார்ச்  24-இல்,  எம்எச்370-இன்  பயணம்  “இந்தியப்  பெருங்கடலின்  தென்பகுதியில்  முடிவுற்றது”  என்று  கூறியதன்  அர்த்தம்  என்னவென்று  அரசாங்கம்  விளக்கமளிக்க  வேண்டும்  என  பக்காத்தான்  தலைவர்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

நஜிப்  அப்படி  அறிவித்ததும்  பிறகு  இடைக்காலப்  போக்குவரத்து  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேனை அழைத்து  விமானம்  கடலில்  விழுந்ததாக  நஜிப்  ஒருபோதும்  சொல்லவில்லை  எனக்  கூற  வைத்ததும்  “தவறு”  என்பது  தெளிவு  என்று  டிஏபி  பெருந்தலைவர்  லிம்  கிட்  சியாங் கூறினார்.

மறுநாள்,  நாடாளுமன்றத்தில்  காணாமல்போன  விமானத்தில்  சென்ற  பயணிகளின்  குடும்பத்தாருக்கு  அனுதாபம்  தெரிவிக்க  சிறப்புத்  தீர்மானம்  கொண்டு  வந்தது  ஏன்  என்றும் அவர்  வினவினார்.

தீர்மானத்தை  முன்வைத்த  நஜிப், இறந்துபோனவர்களுக்காக  சிறப்புப்  பிரார்த்தனை  நடத்துவது  பற்றியும்  முடிவு  செய்யப்படும்  எனக்  குறிப்பிட்டதாகவும்  லிம்  சொன்னார்.