ஷாஹிடானின் கூற்று வெற்றிபெறும் நோக்கில் தொகுதிகள் பிரிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது

1 mariaபிஎன்  அமைச்சர்  ஒருவர்  இன  அடிப்படையிலான  வாக்களிப்புத்தான்  மலேசியாவுக்கு  ஏற்றது  எனப்  பரிந்துரைத்திருப்பது  அந்த  அடிப்படையில்தான்  தேர்தல்  தொகுதிகள்  திருத்தி  அமைக்கப்படுகின்றனவோ  என்ற  கவலையைத்  தோற்றுவித்துள்ளது.

பிரதமர்துறை  அமைச்சர்  ஷஹிடான்  ஹஷிம்தான்  அப்படியொரு   பரிந்துரையை  முன்வைத்தவர்.

“அப்பரிந்துரை  அபத்தமானது. அதுவும்  ஓர்  அமைச்சர்  அப்படிச்  சொல்லியிருப்பது  கேவலமாக இருக்கிறது. ஏனென்றால்,  இது  இன  விவகாரத்தை  நிரந்தரமாக்கி  விடும்”,  என  பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா (இடம்)  கூறினார்.

ஷஹிடானின்  கருத்து, முன்னர்  ஒரு  சமயம் முன்னாள்  தேர்தல்  ஆணையத்  தலைவர்  அப்துல்  ரஷிட்  அப்துல்  ரஹ்மான்,   ஆட்சி அதிகாரம்  மலாய்க்காரர்களிடம்  இருப்பதை  உறுதிப்படுத்தும்  வகையில்  தேர்தல்  தொகுதிகள்  பிரிக்கப்பட்டதாகக்  கூறியதைப்  பிரதிபலிக்கிறது  என்றார்.