போலீஸ் கடவுள் அல்லவே: குமுறுகிறார் 80-வயது முன்னாள் ஆசிரியர்

hrmசி.சுகுமாரன்  இளவயதில்  தந்தையை  இழந்தார். அதன்பின்னர்  அவரின்  சிற்றப்பாவான  ஏ. குப்புசாமியின்  அரவணைப்பில்  வளர்ந்தார். குப்புசாமி  சொந்த  மகனைப்போல்  அவரைப்  பார்த்துக்  கொண்டார்.

ஆனால், 40-வது வயதில்  சுகுமாரன்,  தம்மைப்  பிரிந்துவிடுவார்  என்பதை  பணி ஓய்வுபெற்ற  80-வயது  குப்புசாமி  நினைத்துக்கூட  பார்த்ததில்லை.  கடந்த  ஆண்டு,  சுகுமாரன்,  சாலை  ஓரத்தில் கைகள்  பின்னால்வைத்து  விலங்கிடப்பட்ட  நிலையில்  போலீசாரால்  தாக்கப்பட்டதில்  இறந்துபோனார்.

சவப்  பரிசோதனை  அவர்  மாரடைப்பால்  இறந்தார்  என்று  கூறியது.

சுகுமாரனின்  மரணம் மீதான விசாரணை  இப்போது  நடைபெறுகிறது. அவரின்  குடும்பத்தார்  இரண்டாவது  சவப்  பரிசோதனை  செய்ய  விரும்பினார்கள்.  ஆனால்,  முடியவில்லை.

குப்புசாமி,  நீதிக்காக  போராடப்போவதாக  சூளுரைத்தார். “சுகுமாரன்  ஆடு,மாடா,  பறவையா? அவன் ஒரு  மனிதப் பிறவி……..என்  மகனுக்கு  மட்டுமல்ல……எல்லாருக்குமே  நீதி  தேவை .

“போலீஸ்  கடவுள்  அல்ல. அரசாங்கமும்  கடவுள்  அல்ல. கடவுளால்  மட்டுமே  உயிரைக்  கொடுக்கவும்  எடுக்கவும்  முடியும்….”.

கோலாலும்பூரில்,  போலீஸ்  அத்துமீறல்கள்  மீதான  மனித  உரிமை  கண்காணிப்பு  அறிக்கை  வெளியீட்டு  நிகழ்வில்  குப்புசாமி  இவ்வாறு  கூறினார்.