மலேசியாவுக்கான சீனத் தூதர் ஹுவாங் ஹுய்காங், எம்எச்370 நெருக்கடியைக் கையாண்ட விதம் குறித்து தம் நாட்டு அரசாங்கம் மலேசியாமீது கோபம் கொண்டிருக்கவில்லை என்றார்.
இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய ஹுவாங், மேலை நாட்டு ஊடகங்கள்தான் சீன நாட்டுப் பயணிகளின் குடும்பத்தாரின் உணர்வுகளைச் சீண்டி விட்டார்கள் என்றார்.
“சில பொறுப்பற்ற மேலைநாட்டு ஊடகங்கள் இழிவாக நடந்து கொண்டிருக்கின்றன. தப்பான செய்திகளைப் போட்டார்கள், சச்சரவுகளைத் தூண்டி விட்டார்கள், வதந்திகளையும் பரப்பினார்கள்.
“இவை (பயணிகளின்) குடும்பத்தாருக்கு ஆத்திரமூட்டலாம். இதனால் சீனாவுக்கும் மலேசியாவுக்குமிடையில் உறவுகள் பாதிப்புறலாம். இதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்”, என்றாரவர்.
மேலை நாடுகளுடன் எந்த நாடு (நம்முடையே அண்டை நாடு மற்றும் இன்னும் பல நாடுகள்) அடிமையாக இருகின்றதோ அந்த நாடுகளை மேலை நாட்டு ஊடகங்களும் சரி, தலைவர்களும் சரி, இந்த அடிமை நாடுகள் என்ன தவறு செய்தாலும், பெருசு படுத்த மாட்டார்கள். வாழ்வது சிறிது நாட்களே, அந்த குறைவான நாட்களிலும் மற்றவனுக்கு அடிமையாக வாளாதே.
கோபமில்லை என்பது உண்மை தான். ஆனால் உள்ளுக்குள்ளே ஏதாவது பேரம் பேசிக் கொண்டிருப்பீர்களே! உங்களுக்கு இது கை வந்த கலை தானே!
மலையாசிய சினவிடம் அ……மை என புரிது கொள்ள வேண்டும் கரணம் பிளட பங்கு
100பில்லிஒன் .