எம்எச்370 தேடும்பணிக்கு அமெரிக்கா இதுவரை யுஎஸ்$3 மில்லியன் செலவிட்டுள்ளது

planeகாணாமல்போன  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370  விமானத்தைத்  தேடுவதற்காக  அமெரிக்க  இராணுவம்  யுஎஸ்$3.3 (ரிம10.8) மில்லியனுக்குமேல்  செலவிட்டிருப்பதாக  பெண்டகன்  பேச்சாளர்  ஒருவர்  நேற்றுத்  தெரிவித்தார்.

“அது, தேடும்  பணியில்  ஈடுபட்டுள்ள  விமானங்கள்,  கப்பல்கள்,  ஹெலிகாப்டர்களுக்குச்  செலவான  தொகை”, என  கர்னல்  ஸ்டீவ்  வாரன்  கூறினார்.

விமானத்தைத்  தேடும்பணிக்குத்  தற்காப்பு  அமைச்சர்  சக்  ஏகல்  வெளிநாட்டு  மனிதாபிமான  பேரிடர்  உதவித்  தொகையிலிருந்து யுஎஸ்$4 மில்லியனை  ஒதுக்கி  இருப்பதாக  அவர் தெரிவித்தார்.