‘முறைகேடான வரி’ எனச் சிந்தனைக்குழு சாடல்

gstபொருள், சேவை  வரி (ஜிஎஸ்டி)யை  அறிமுகப்படுத்தும்  முடிவு  ஒரு “முறைகேடான” கொள்கை  என்று  சாடிய  பிகேஆருடன் தொடர்புள்ள  இன்ஸ்டிடியுட்  ரக்யாட்,  அதனால் பணக்காரர்களுக்கும்  ஏழைகளுக்குமிடையிலான  இடைவெளி  மேலும் விரிவடையும்  என்றும்   எச்சரித்துள்ளது.

அடுத்த  ஆண்டில்  நடைமுறைக்கு  வரும்  அந்த  வரி,,  பணக்காரர்களைவிட  ஏழைகளுக்குத்தான்  பெரும்  சுமையாக  அமையும்.

ஜிஎஸ்டி-யால்  அரசாங்கமும்  அந்த வரியை  வசூலிக்கும்  நிறுவனங்களும்தான்  நன்மையடையும்  என்று  கூறிய  இன்ஸ்டிடியுட்  ரக்யாட்,  இதில் இப்போது  வருமான  வரி  செலுத்தாத  குறைந்த  வருமானம்  பெறுவோர்தான்  அதிகம்   பாதிக்கப்படுவார்கள்  என்று  கூறியது.

“பயனீட்டாளர்கள்  இப்போது  கொடுப்பதைவிட  கூடுதல்  வரி கொடுப்பார்கள்.  அதன்வழி  அரசாங்கத்தின்  வரி  வருமானத்தில்  சுமார்  ரிம3.87 பில்லியன்  கூடும்  என  மதிப்பிடப்படுகிறது.”,  என இன்ஸ்டிடியுட்டின்  பொருளாதார  நிபுணர்  அஸ்ருல்  அஸ்வார்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.