நேற்றிரவு சாபா, செம்பூர்ணாவில் ஒரு சீன நாட்டவரும் ஒரு பிலிப்பினோவும் கடத்தப்பட்ட சம்பவம் சீனாவுக்கும் மலேசியாவுக்குமிடையிலான உறவுகளைக் கெடுக்கும் முயற்சியாக இருக்கலாம் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கருதுகிறார்.
கடத்தலுக்குப் பின்னே அப்படி ஒரு நோக்கம் இருப்பதை “மறுப்பதற்கில்லை” என ட்விட்டரில் நஜிப் கூறியதாக பெர்னாமா அறிவித்துள்ளது.
முன்னதாக, செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய மசீச தலைவர் லியோ தியோங் லாய், எம்எச்370 விமானத்தைத் தேடும் பணி தொடரும் வேளையில் நடைபெற்றுள்ள கடத்தல் சம்பவம் மலேசியாவின் நற்பெயருக்கு மேலும் களங்கத்தை உண்டுபண்ணும் என்றார்.
அந்தச் செய்தியாளர் கூட்டத்தில் இருந்த மலேசியாவுக்கான சீனத் தூதர் ஹுவாங் ஹுய்காங், மலேசியா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்திச் சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
எல்லாம்
நாடக
மேடை
. இதில் எங்கும் நடிகர்
கூட்டம்
இவ்விடையத்தில் ….
எல்லாம் அரசியல் !!
.நன்றாக போய்க் கொண்டிருந்த நம் நாட்டில்,இப்போது அதை காணோம் இதை காணோம் என்றாகிவிட்டது.நம் நாட்டு வீரர்களுக்கெல்லாம் தேடும் நடவடடிக்கையிலே நேரம் விரயமாகிறது.
எமகண்ட அரசியல் நாடகம் !!!
ஏதேயா என்னதியெஹ் திசை திருப்பும் அம்னோ கபட நாடகம்
சீன-மலேசிய உறவு கெட்டுப்போனால் என்ன! உங்கள் சொந்த உறவுகள் எல்லாம் சௌக்கியமாக இருந்தால் போதும்! நாடு நலமாக இருக்கும்!