எம்ஏஎஸ் வழக்குகளைத் தவிர்க்க இயலாது

wheelerகாணாமல்போன  எம்எச்370  பற்றி  ஒரு  தடயமும்  கிடைக்காத  நிலையில்,  பயணிகளின்  குடும்பத்தார்  தொடுக்கும்  வழக்குகளை  மலேசிய விமான  நிறுவனம் (எம்ஏஎஸ்)  தவிர்க்க  இயலாது  என  வழக்குரைஞர்கள்  கூறுகின்றனர்.

1999 மொண்ட்ரியோல்  ஒப்பந்தப்படி,  விமான நிறுவனம்  ஒவ்வொரு   பயணிக்கும் ரிம570,820  இழப்பீடு  கொடுக்க  வேண்டியிருக்கும்  என  பிரிஸ்பேன்  வழக்குரைஞர்  ஜோசப்  வீலர்  கூறினர்.

அதற்குக்  கூடுதலாக  இழப்பீடு  கேட்டுத் தொடுக்கப்படும்  வழக்குகளைத்  தவிர்க்க   வேண்டுமானால்  எம்ஏஎஸ்,  விமானம்  இழக்கப்பட்டதற்கு  தன்  கவனக்குறைவு  காரணம்  அல்ல  என்பதை  அல்லது  மூன்றாம்  தரப்பு  ஒன்றுதான்  அதற்குக்  காரணம் என்பதை  நிரூபிக்க  வேண்டும்.

“ஆனால், குற்றம்  தன்னுடையது  அல்ல  என்று  வாதாடுவதற்கு  அவர்களிடம்  எந்த  ஆதாரமும்  இல்லை…..”,  என  வீலர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.