கருப்புப் பெட்டியைத் தேடுகிறது பிங்கர் லோகேட்டர்

locateகாணாமல்போன  எம்எச்370  விமானத்திலிருந்த  கருப்புப்  பெட்டியின்   இருப்பிடத்தைக்   கண்டறிய  உதவும்  என்று  நம்பப்படும் pinger locator  என்னும்  கருவி   அதன்  பணியைத்  தொடங்கி  இருப்பதாக  சிஎன்என்  டிவிட்டரில்  கூறியுள்ளது.

விமானத்தைத்  தேடும்பணியில்  ஈடுபட்டுள்ள  ஆஸ்திரேலிய கப்பலான  ஓஷன்  ஷீல்ட்  தான்  போகுமிடங்களுக்கு  இந்தக்  கருவியையும்  இழுத்துச்  செல்கிறது.

இந்த  பிங்கர்  லோகேட்டர்  அமெரிக்கக்  கடல்  படையிடமிருந்து   இரவல்  பெறப்பட்டிருக்கிறது. அதுவும்  விரைவாக  செயல்பட வேண்டும்.
கருப்புப்  பெட்டியிலிருந்து  இன்னும்  இரண்டு நாள்களுக்குத்தான்   சமிக்ஞைகள்  வெளிப்படும். அதன்பின்னர்  அதிலுள்ள  பேட்டரிகள்  செயலிழக்கும்  எனக்  கருதப்படுகிறது. பேட்டரி  செயலிழந்தால்  கருப்புப்  பெட்டியைக்  கண்டுபிடிப்பது  கடினமாகி விடும்.