அரசாங்கம் செய்யும் முடிவுகளுக்கு அமைச்சரவைதான் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும். அந்த வகையில் மெமாலி நிகழ்வுக்கும் 1985-இல் இருந்த அமைச்சரவைதான் முழுப் பொறுப்பு என்கிறார் அரசமைப்பு நிபுணர் அப்துல் அசீஸ் பாரி.
முன்னாள் துணைப் பிரதமர் வெளியிட்ட தகவல் குறித்து கருத்துரைத்த அசீஸ் பாரி (இடம்), கூட்டுப் பொறுப்பு என்கிறபோது அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மட்டுமல்ல அப்போது விவசாய அமைச்சராக இருந்த அன்வார் இப்ராகிமும்கூட அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்.
“நாடாளுமன்றத்துக்குப் பதில்சொல்லும் கூட்டுப் பொறுப்பு அமைச்சரவையினுடையது என்று அரசமைப்புப் பகுதி 43(3), கூறுகிறது.”, என்றாரவர்.
மூசா, இன்று மலேசியாகினியில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், கெடாவில் 1985, நவம்பர் 19-இல் நான்கு போலீசாரும் 14 சிவிலியன்களும் பலியான மெமாலி சம்பவம் நிகழ்ந்தபோது மகாதிர் நாட்டில்தான் இருந்தார் என்றும் அந்த உண்மையைச் சொல்ல அம்னோவோ அரசாங்கமோ தயாராக இல்லை என்றும் கூறி இருந்தார்.
முடிவில், கிளந்தானில் நடந்த ஒரு நிகழ்வுதான் அதை வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தமக்கு அளித்ததாக முன்னாள் உள்துறை அமைச்சருமான மூசா கூறினார்.
யு உலாங் ஐ சமன், மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.
உங்கள் நியாயம் இங்கு பலிக்காது.
மூசாவை “செக் மேட்” செய்யவே அன்வாரை அம்னோவுக்குள் 1982 – ல் நுழைத்தவர் மாமாக்திர். அன்வாரின் கை அம்னோவில் ஒங்க, மூசா நிலைமை அறிந்து பதவி விலகினார். இதன் பயனையே 1997-ல் மாமாக்திர் அனுபவிக்க வேண்டிய நிலை வந்தது. வளர்த்த கடா மார்பில் பாய தயாராகி இருந்த வேளையில், ஓங்கி அன்வாரின் பின்னால் ஒரு அடி அடித்தார் மாமாக்திர். அந்த அடியிலிருந்து அன்வார் இன்னும் மீளவே இல்லை. வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்னும் பழமொழியை அம்னோ தலைமை நிருவாகம் அறிந்து வைத்திருக்கவில்லை போலும்.
1985 உண்மை இபோழுது வெளியணுது .2014 நடக்கிறது என மகன் படிப்பான் .என்ன நாடு இது .