ஜோகூர் மாநில அரசு, வார இறுதி விடுமுறை முன்பு இருந்ததுபோல் சனி, ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்படும் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் அதன் தொடர்பில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வந்தாலும் வார இறுதி விடுமுறைகளில் மாற்றம் செய்யப்படாது என்பதை மந்திரி புசார் முகம்மட் காலிட் நூர்டின் திட்டவட்டமாக அறிவித்தார்.
“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்கள்”,என இன்று மூவாரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
சனி, ஞாயிறாக இருந்த வார இறுதி விடுமுறை ஜனவரி தொடங்கி, ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிமின் உத்தரவுப்படி வெள்ளி, சனியாக மாற்றப்பட்டது.
மண்ணாங்கட்டி !
எனக்கு புரியவில்ல நைனா , மலேசியாவில் மா மன்னர் கீழ்
மக்கள் ஆட்சி என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் . ஆனால்
சுல்தான்கள் ஆட்சி என்று கேள்விப்படவில்லை ,நல்ல வேலை
நம்ம பேரசர் வெள்ளிகிழமை விடுமுறை என்று அறிவிக்க வில்லை .கெலந்தான் , கெடா, திரெங்கானு ,பெர்லிஸ் மாநிலங்களில் வெள்ளி விடுமுறை என்றால் அங்கே இஸ்லாமிய பாஸ் கட்சி ஆட்சியில், இருக்கிறது ஆனால்
ஜொகூரில் பி என் கட்சியல்லவா ஆட்சி செய்கிறது , பி என் கட்சி ஆட்சி செய்யும் நாட்டில் ஏன் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நைனா..