தண்ணீர் கட்டணத்தை உயர்த்தும் பினாங்கின் முடிவை மசீச சாடியது

lim kuanபயனீட்டாளர்கள்  நீரை  விரயமாக்குவதைத்  தடுக்க  நீர்க்  கட்டணத்தை  உயர்த்தப்போவதாக  அறிவித்துள்ள  பினாங்கு  அரசுக்கு  மசீச  கடும்  கண்டனம்  தெரிவித்தது.

பினாங்கு  அரசு,  மாநில  மக்களின்  நலனைப்  புறக்கணிக்கிறது  என  பினாங்கு  மசீச  துணைத்  தலைவர்  டான்  தெக்  செங்  கூறினார்.

“மீண்டும்,  நீர்க் கட்டணம்  மக்களுடன்  கலந்து  ஆலோசிக்காமலேயே  உயர்த்தப்படுகிறது. வெளிப்படைத்தன்மை, நியாயம், நீதி  என்று  பேசும்  டிஏபி  இப்படிச்  செய்வது  முரண்நகையாக  இல்லை?”, என டான்  வினவினார்.

முதலமைச்சர்  லிம்  குவான்  எங் (இடம்)  அவரது  அதிகாரப்பூர்வ  இல்லத்துக்கும்  மற்ற  அரசுத்துறைகளுக்குமான  நீர்க்  கட்டணத்தைத்  தெரிவிக்க  வேண்டும்  எனவும்  அவர்  கேட்டுக்கொண்டார்.

தண்ணீரைச்  சேமிப்பதில்  அவர்  முன்மாதிரியாக  விளங்குகிறாரா  என்பதை  அது  காண்பித்து  விடும்  என டான்  கூறினார்.

2008-இல், பக்காத்தான்  ரக்யாட்  ஆட்சிக்கு  வந்ததிலிருந்து  பினாங்கு  மக்கள்  பல  சிரமங்களை  எதிர்நோக்குவதாக  அவர்  குற்றம்  சாட்டினார்.