எம்எச்370: சமிக்ஞைகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

370சீனக்  கப்பலான  ஹைக்சுன் 01  பதிவுசெய்த மின் துடிப்பொலிகள்  குறித்து  அவசர  முடிவுக்கு  வந்து விடக்கூடாது  என்று  எச்சரிக்கிறார்  ஆஸ்திரேலிய  பிரதமர்  டோனி  அப்பட்.

“மனித  வரலாற்றில்  மிகவும்  கடினமான  தேடும்பணி  இது.  ஒரு பெருங்கடலின்  மிக  ஆழமான  பகுதியில் ஒரு  விமானத்தைத்  தேடிக்  கொண்டிருக்கிறோம், மிகவும்  பரந்த  பகுதியில்  தேட  வேண்டி  இருக்கிறது.

“மிகவும்  கவனமாக  இருக்க  வேண்டும்.  அவசரப்பட்டு  முடிவுகளை  எடுத்துவிடக்  கூடாது”,  என  அவர்  கூறியதாக  ராய்ட்டர்ஸ்  அறிவித்துள்ளது.

அந்தத்  துடிப்பொலியின்  அதிர்வெண் 37.5.  இயற்கையில்  அந்த அதிர்வெண்  கொண்ட  துடிப்பொலி  கிடையாது.  அதனால்தான்  கரும்பெட்டிக்கு  அப்படி  ஒரு  துடிப்பொலி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக  ஒரு  வல்லுனர்  தெரிவித்ததாக  அசோசியேடட்  பிரஸ்  கூறியது.

அணுநீர்மூழ்கிகளிலிருந்தும்  அப்படிப்பட்ட  ஒலி  வருவதுண்டு  என்கிறாரவர். ஆனால்,  அது  எம்எச்370-இலிருந்துதான்  வருகிறது  என்று  உறுதிப்படுத்தப்பட்டால்  விமானம்  10 சதுர  கிலோ  மீட்டருக்குள்  இருக்கலாம்.