பிரதமர்துறை அமைச்சர் பால் லவ், ரிம2.42 மில்லியன் செலவில் கட்டப்படும் கின்ராரா- டமன்சாரா நெடுஞ்சாலை(கிடெக்ஸ்) பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு கூட்டறிக்கையில் இயோ பீ இன் (டமன்சாரா உத்தாமா), ஆர்.ராஜிவ் (புக்கிட் காசிங்), இங் ஸ்சே ஹான் (கின்ராரா), லாவ் வெங் சான்(கம்போங் துங்கு) ஆகிய நால்வரும், லவ்(இடம்) கடந்த மாதம் டோல் ஒப்பந்தத்தை இரகசியமாக வைத்திருப்பது தேவைதானா என்று கேள்வி எழுப்பியதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“லவ், அவர் பதவியில் இருக்கும்போது கட்டப்படும் நெடுஞ்சாலைகள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். கிடெக்ஸ்- இலிருந்து அதைத் தொடங்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்”, என்றவர்கள் கூறினர்.
கிடெக்ஸ், டமன்சாரா-பூச்சோங் நெடுஞ்சாலையின் அளவுமீறிய நெரிசலைக் குறைக்க உதவும் என்பதை ஒப்புக்கொண்ட அவர்கள், அது நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனத்துக்குப் பணம் காய்க்கும் மரமாக மாறிவிடக்கூடாது என்று கவலை தெரிவித்தார்கள்.
முடியவே முடியாது…. (ஒ எஸ் எ) அதற்கு வழிவகுக்காது என்று காரணம் சொல்லிடுவார்…..இதுதானே இவ்வளவு காலம் நடக்கிறது…
ஆரியக் கூத்தாடி காரியத்தில் கண்ணாய் இருப்பார். அவரின் காரியம், அம்னோ அரசாங்கத்தின் ஊழல்களை மூடி மறைப்பதே. அதைத்தான் நன்றாகச் செய்து கொண்டிருக்கின்றாரே!.