எம்எச்370 காணாமல்போன சம்பவம் அடுத்த மாதம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சீன வருகையை நிச்சயமாக பாதிக்கவே செய்யும் என்கிறார் அவரின் அரசியல் செயலாளர் வொங் நை சீ.
“பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அதனால், அதை ஆரவாரத்துடன் கொண்டாடும் வாய்ப்பில்லை.
“விமானம் காணாமல் போகாமலிருந்தால் கொண்டாட்டம் வேறு விதமாக இருக்கும்”, என்றவர் தெரிவித்ததாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் கூறியது.
நஜிப், சீனாவுடன் இருதரப்பு உறவுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட 40 ஆண்டு நிறைவைக் கொண்டாட அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்கிறார்.
பிரதமரின் சீன வருகை மட்டுமல்ல, இனி உலகில் நடைபெறும் அனைத்து விவகாரங்களிலும் மலேசியா அடக்கி வாசிக்க வேண்டிய நிலையை உருவாக்கி விட்டது ” MH 370 ” விமான பேரிடர் என்பது மறுக்க முடியாத உண்மை.