எம்எச்370 அடையாளம் கண்டுபிடிக்கப்படாமலிருக்க இந்தோனேசிய வான் எல்லை ஒரமாக பறந்துசென்றதாகக் கூறப்படுவதை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை(டிசிஏ) “உறுதிப்படுத்தப்படாத” தகவல் என்று கூறியது.
“அது உறுதிப்படுத்தப்படாத தகவல். அதிகாரப்பூர்வ வட்டாரத்திலிருந்து சொல்லப்பட்டதுமல்ல”, என டிசிஏ தலைமை இயக்குனர் அசாருடின் அப்துல் ரஹ்மான் கூறியதாக த ரக்யாட் போஸ்ட் அறிவித்துள்ளது.
நேற்று சிஎன்என், அந்த விமானம் இந்தியப் பெருங்கடலை நோக்கிச் செல்லுமுன் இந்தோனேசிய எல்லையோரத்தில் பறந்ததை அந்நாட்டு ரேடார்கள் காட்டுவதாக மலேசிய இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டிக் கூறி இருந்தது.
தயவு செய்து ஆருடத்தை நிறுத்தவும்,உண்மை மட்டும் எங்களுக்கு வேண்டும்.வலி மேல் விழி வைத்து காத்திருக்கிறோம் ம்ஹ்370 வரவேண்டும்.
” MH 370 ” மலேசியே வானில் பறந்ததாக இருக்கட்டும் அல்லது இந்தோனேசிய எல்லையோரத்தில் பறந்ததாக இருக்கட்டும்,
எதற்கு இதை இப்பொழுது சொல்கிறார்கள் நமது ” தும்பை விட்டுட்டு வாலை தேடும் ” சொல்லுக்கு பொருத்தமான மலேசிய இராணுவத்தினர். ஒருவேளை பழியை யார் மீதோ சுமத்த போகிறோம் என்று சூசகமாக கூறுகிறார்களோ ????
தீவிரவாதிகள் ஏதோ ஒரு ……………கான் நாட்டிற்கு கடத்தி விட்டதாகவும் தான் சொல்லுகிறார்கள்! பொது மக்களிடையே ஏகப்பட்ட வதந்திகள்! ஆனால் கடலில் விழுந்ததை யாரு ஏற்றுக் கொள்ள வில்லையே! அதற்கு ஏற்ற மாதிரி இது வரை எந்த ஒரு பொருளும் கடலிலிருந்து கண்டுபிடிக்க முடியவில்லையே! இதுவும் உறுதிப்படுத்தாத தகவல் தான்!