நம்பிக்கை அளிக்கும் துடிப்பொலிகள்

oceanஎம்எச்370:  காணாமல்போன  விமானத்தைத்  தேடும்பணியில்  அண்மையில்  ஏற்பட்டுள்ள  முன்னேற்றங்கள்  குறித்து  கூட்டு  ஒருங்கிணைப்பு  மையத்  தலைவர்  ஏர்  சிஃப்  மார்ஷல்  அங்குஸ்  ஹூஸ்டன்  விளக்கமளித்துள்ளார்.  அவரது  விளக்கத்தில்  கவனத்தைக்  கவர்ந்த  சில  தகவல்கள்:

 

கடந்த 24  மணி  நேரத்தில், ஆஸ்திரேலிய  கடற்படை கலமான  ஓஷன்  ஷீல்ட்  சில  சமிக்ஞைகளைப்  பதிவு  செய்துள்ளது.  அவை  விமானங்களின்  கரும்பெட்டிகள்  வெளியிடும்  சமிக்ஞைகளை  ஒத்திருந்தன.
“இதுவரை  கிடைத்துள்ளவற்றில்  இதுவே  நம்பிக்கையளிக்கும்”  தடயமாக  விளங்குவதாய்  அவர்  சொன்னார். ஆனால்,  சமிக்ஞைகள்  எம்எச்370- இலிருந்துதான்  வருகின்றன  என்பதை  உறுதிப்படுத்திக்  கொள்ளவே பல  நாள்கள்  ஆகும்  என்றாரவர்.

4,500 மீட்டர்  ஆழத்திலிருந்து  சமிக்ஞைகள்  வருவதாக தெரிகிறது.

ஒரு  “தீர்க்கமான  முடிவுக்கு”  வருவதற்கு  விமானத்தின்  உடைந்த  பகுதிகளைக்  கண்டுபிடிப்பது  அவசியம்  என்பதை  அவர்  வலியுறுத்தினார்.