நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஏசி), வெளிநாடுகளில் தொழிலாளர் சேமநிதி வாரியம்(இபிஎப்) அதிகமதிகமாக முதலீடு செய்வதைக் குறிப்பாக நில உடைமைகளில் முதலீடு செய்வதைக் கண்காணிக்க வேண்டும் என அரசாங்கத் தலைமைக் கணகாய்வாளர் அம்ப்ரின் புவாங் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இதனைத் தெரிவித்த பிஏசி தலைவர் நூர் ஜஸ்லான் முகம்மட் (இடம்), 2012 இருந்ததைவிட கடந்த ஆண்டு இபிஎப்-இன் வெளிநாட்டு முதலீடுகள் 10 விழுக்காடு உயர்ந்து ரிம6.46 பில்லியன் ஆனதாகக் கூறினார்.
“எதற்காக முதலீடுகள் செய்யப்படுகின்றன, அதனால் இடர்கள் ஏற்படுமா, போட்ட பணம் திரும்பி வருமா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள தலைமைக் கணக்காய்வாளர் விரும்புகிறார். சில இடங்களில் ஊழல் இருக்கலாம் என்றுகூட நினைக்கிறார். எங்களுக்கு எதுவும் தெரியாது”, என நூர் ஜஸ்லான் தெரிவித்தார்.
இதெல்லாம் யார் அப்பன் வீட்டுப் பணம்? யார் கவலைப்படப் போகிறார்! முதலீடு செய்பவர்கள் எல்லாம் நிதி நிபுணர்கள் ஆயிற்றே!