எம்ஏஎச்பி: கட்டுமானச் செலவு கூடியதற்கு ஏர் ஏசியாதான் காரணம்

kliaகேஎல்ஐஏ2  கட்டுமானச்  செலவு  அளவுமீறிக்  கூடிப்போனதற்கு  ஏர்  ஏசியாதான்  காரணம்  என்று  மலேசிய  விமான  நிலையங்கள்  நிறுவனம்  (எம்ஏஎச்பி)  கூறியுள்ளது.

“செலவு  கூடியதற்கு  ஏர் ஏசியாதான்  காரணம்  என்று  எம்ஏஎச்பி  தெரிவித்துள்ளது.  இனி, ஏர்  ஏசியாவிடம்தான்  அது  எதற்காக  பெரிய  விமான  நிலையம்  வேண்டும்,  பெரிய  ஓடுபாதை  வேண்டும்  என்றெல்லாம்  கேட்டது  என்று    விசாரிக்க  வேண்டும்.

“விமான  நிலையத்தை  ரிம2 பில்லியனில்  கட்டி  இருக்கலாம்  ஆனால்,  அது  இப்போதுள்ளதைப்போல்  பெரியதாக  இருக்காது  என எம்ஏஎச்பி  கூறியது”, என்று  பிஏசி  தலைவர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  தெரிவித்தார்.

ஏர்  ஏசியா ஏப்ரல்  28-இல்,  பிஏசியிடம்  விளக்கமளித்த  பின்னர்தான் பிஏசி-யால்  கேஎல்ஐஏ2  விவகாரம்  குறித்து  சமச்சீரான  அறிக்கை  ஒன்றை  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்ய  முடியும்  என்றாரவர்.