எம்எச்370: அடுத்த கட்டமாக கடலடியில் தேடும்பணி தொடரும்

bluefinகாணாமல்போன  மலேசிய  விமானத்தைக்  கண்டுபிடிக்க  கடல்பரப்பில்  தடயம்  எதுவும்  கிடைக்கவில்லை  என்பதால்  அடுத்து  ரோபோட்  வாகனமொன்றைக்  கடலுக்கடியில்  அனுப்பிக்  கடலடியில்  தேடும்பணி  தொடரும்  எனத்  தெரிகிறது.

தேடும்பணியை  ஒருங்கிணைக்கும்  ஆஸ்திரேலிய  நிறுவனத்தின்  தலைவரான  அங்குஸ்  ஹுஸ்டன், ஆஸ்திரேலிய  கப்பலான ஓஷன்  ஷீல்ட்  புளுஃவின் -21  என்னும்  தானியங்கி  வாகனம்  ஒன்றைக்  கடலடிக்கு  அனுப்பும்  என்றார்.

சோனார்  கருவி  பொருத்தப்பட்ட  புளுஃவின் -21,  கடலடியில்  விமானம்  உள்ளதா  என்று  தேடிப்பார்க்கும்.

வழக்கத்துக்கு  மாறாக  எதுவும்  தென்பட்டால்,   நெருங்கிப்  பார்ப்பதற்காக  அதில்  கேமிராவைப்  பொருத்தி  மீண்டும்  கடலுக்கடியில்  அனுப்பி  வைப்பார்கள்.