எதிர்ப்பு ஏற்பட்டதால்தான் போலீஸ் படையில் ஊழல்-தடுப்பு அதிகாரி நியமனம் செய்யப்படவில்லையா என்பதை பிரதமர்துறை அமைச்சர் பால் லவ் விளக்க வேண்டும் டிஏபி எம்பிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் வழங்கிய பதில் ஒன்றில், மலேசிய ஊழல்-தடுப்பு ஆணைய அதிகாரிகள், போலீஸ் படை தவிர்த்து, பல்வேறு அரசுதுறைகளுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாக லவ் கூறி இருந்தார். “போலீஸ் சொந்தத்தில் நேர்மைக் கண்காணிப்புத் துறை ஒன்றைப் பெற்றுள்ளது” என்றாரவர்.
“போலீஸ் என்ன அவ்வளவு சக்திபடைத்ததா? போலீசைப் போலீஸ் தவிர வேறு யாரும் கண்காணிக்கக் கூடாதா?”, என செகாம்புட் எம்பி லிம் லிப் எங் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது வினவினார்.
ஆஹா….ஒரே கொண்டாட்டம்!!!!!