அதிர்ச்சிதரும் நிலையில் சிறுவர் விளையாட்டுப் பூங்காக்கள்

agமக்கள்தொகை  மிகுந்த  மாநிலங்களில் ஒன்றான  ஜோகூர்,   இப்போது  சிறுவர்களுக்குப்  பயன்படாத  சிறுவர்  விளையாட்டுப்  பூங்காக்கள்   நிரம்பிய  மாநிலமாகவும்  விளங்குகிறது.

தலைமைக்  கணக்காய்வாளர்  அறிக்கை  அவ்வாறு  கூறுகிறது. ஜோகூர்  பாரு  தெங்காவிலும்  மூவாரிலும்  39  சிறுவர்  விளையாட்டுப்  பூங்காக்களைப்   பார்வையிட்டதாகவும்  அவற்றில்  34  மோசமான  நிலையில்  இருப்பதைக்  கண்டதாகவும்  அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில்  உள்ள  சறுக்குப்  பலகைகளும்  ஊஞ்சல்களும்  கைவிடப்பட்ட  நிலையில் காணப்பட்டன.  திடல்  முழுக்க  புதர்  மண்டிக்  கிடந்தது.  சிறுவர்களுக்காகக்  கட்டப்பட்ட  இந்த  இடங்களை  இப்போது பெரியவர்கள்  ஆக்கிரமித்துக்  கொண்டிருப்பதாகவும்  அது  கூறிற்று.

“ஊடுருவல்காரர்கள்  சிறுவர்  விளையாட்டுப்  பூங்காக்களை  மாந்  தோப்பாகவும், தென்னந்  தோப்பாகவும்  வாழைத்  தோப்பாகவும்  மாற்றி  விட்டார்கள்.  காய்கறிகளையும்  பயிரிடுகிறார்கள்.

“இன்னும்  மோசமாக,  சில  இடங்களில்  கார்  நிறுத்துமிடங்களை  உருவாக்கியுள்ளனர், கடைகள்  அமைத்துள்ளனர்.  சில  இடங்கள்  குப்பை  கொட்டும்  இடங்களாக,  எரிக்கும்  இடங்களாக  மாறியுள்ளன”,  என்று  அவ்வறிக்கை  கூறியுள்ளது. .