குறைந்த-விலை வீடுகளை வாடகைக்கு விடுவது குற்றம்

houseகுறைந்த-விலை  வீடுகளின்  உரிமையாளர்கள்  அவர்களின்  வீடுகளை,  வெளிநாட்டவர்  உள்பட,  மற்றவர்களுக்கு  வாடகைக்கு  விடுவதை  நிறுத்திக்  கொள்ள  வேண்டும்.  தவறினால்  அவர்கள்மீது  நடவடிக்கை  எடுக்கப்படும்.

குறைந்த-விலை  வீடுகளை  வாடகைக்கு  விட்டிருப்போருக்கு  விரைவில்  அறிவிக்கைகள்  அனுப்பப்படும்  என  பினாங்கு  அரசு  அறிவித்துள்ளது.

குறைந்த- விலை  வீடுகளின்  உரிமையாளர்கள்  அவற்றில்  குடியிருக்க  வேண்டும்,  வாடகைக்கு  விடக் கூடாது  என  மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினர்  ஜக்தீப்  சிங்  டியோ  கூறினார்.

“வாடகைக்கு இருப்போரை  வெளியேற்ற  அவர்களுக்கு  ஒரு  மாதம்  அவகாசம்  கொடுப்போம். அதைச்  செய்யாதவர்களுக்கு  எதிராக,  ஒப்பந்தத்தை  மீறியதற்காக  சட்ட  நடவடிக்கை  எடுக்கப்படும்”,  என்றாரவர்.