சிலாங்கூர் மந்திரி புசார், அப்துல் காலிட் இப்ராகிம், ‘அளவுக்கதிகமான அதிகாரத்தைத் தன்வசமே வைத்துக்கொண்டிருக்கிறாராம்’.
சிலாங்கூர் சட்டமன்றத்தில் இவ்வாறு கூறிய இங் சுவி லிம்(டிஏபி- செகிஞ்சான்), இதைப் பார்க்கையில் காலிட் அவரது ஆட்சிக்குழுவை நம்புவதில்லை என்பதுபோல் தெரிகிறது என்றார்.
“அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. அதிகமான அதிகாரம் மந்திரி புசாரிடம் உள்ளது……
“இந்த அதிகாரத்தை சிகிஞ்சானுடன் (அஹ்மட் யூனுஸ் ஹைரி), சாபாக்குடன் (சாலேஹின் முஹி), ஸ்ரீ கெம்பாங்கானுடன் பகிர்ந்து கொள்வதில் என்ன தவறு?”, என்றவர் வினவினார்.
அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுத்தால் மட்டுமே ஆண்டு இறுதியில் ஆட்சிக்குழுவினரின் அடைவுநிலையை அளவிட முடியும் என இங் கூறினார்.
இதுலே ஏதோ உள்நோக்கம் இருக்கும் போல் இருக்கே!
எந்த அரசாக இருந்தாலும் அதிகாரம் ஒருவாறு\இடமே குவிந்து கிடந்தால் அது அழிவுக்கு இட்டு செல்லும் .அதே போல் தான் இந்த மந்திரி புசார் மற்றும் பிரதமர் பதவியும் .இரண்டு பதவியிலும் அதிகாரம் ஒருவரிடமே குவிந்து கிடக்கிறது.இதை தான் மிகவும் நாகரிமாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.சிலங்க்கூர் மாநிலத்திக்கு ஒரு அரசியல் அதிகாரம் தெரிந்த மக்களுக்கு சேவை செய்யக் கூடிய நல்ல தலைவர் தேவை. தன் ஸ்ரீ காலிட் ஒரு நல்ல வணிகர்.ஆனால் அவர் ஒரு நல்ல அரசியல் தலைவர் அல்ல.மாநில மக்களின் தேவையை பூர்த்தி செய்யக் கூடியவராக இல்லை.வங்கியில் கோடிக்கணக்கான பணம் சேமித்து வைத்து விட்டு மாநில மக்கள் வறுமையில் இருப்பதனால் என்ன லாபம்.அவரை மக்கள் மெச்ச வேண்டும் என்பதக்காக மாநில சேமிப்பை அதிகரித்துள்ளார்.ஆனால் மாநில மக்களின் தேவையை கொட்டை விட்டு விட்டாரே.தேர்தல் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில் சிலாங்க்கூரில் எந்த வித புதிய திட்டங்களும் அமல் படுத்த வில்லை .மேலும் தற்போதைய குடி நீர் பங்கிட்டு முறை மாநில மக்களை வாட்டி வதைக்கிறது.இவர் தேசிய முன்னணியின் கை பவை யாகிவிட்டற என்ற சந்தேகம் நமக்கு ஏல தொடங்கிவிட்டது.இவருக்கு இப்போதே முக்கனாங் கயிறு போடா வில்லை என்றால் எதிர் காலத்தில் இன்னும் மோசமான விபரீதங்களை மாநில மக்கள் எதிர் நோக்க வேண்டி வரும்.தற்போதைய நிலையில் அவருக்கு முக்கனாங் கயிறு மிகவும் அவசியமாகும்.