உங்கள் கருத்து ‘மலேசியாவைப் பற்றிக் கவலைப்படுகிறோம், அதனால்தான் அரசாங்கத்தைக் குறை கூறுகிறோம்’
ஷஹிடான்: மலேசியாவைப் பற்றி வெளிநாடுகளில் பொல்லாங்கு பேசுதல் ஒழுக்கக்கேடான செயலாகும்
டான் கிம் கியோங்: நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கும் பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிமின் பதிலுக்கும் என்ன தொடர்பு?
வெளிநாடுகளில் தகவல்களைக் கசியவிடுவது உளவுசொல்லுதல் ஆகுமா என்ற வினவலுக்கு மலேசியாவைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் வெளிநாடுகளில் பொல்லாங்கு பேசுதல் ஒழுக்கக்கேடான செயலாகும் என்று பதிலளித்துள்ளார்.
அறிவார்ந்த பேச்சு: ஷஹிடான், பிஎன் அரசாங்கத்தைக் குறைசொல்வதும் மலேசியாவைக் குறைகூறுவதும் ஒன்றல்ல. மலேசியாவைப் பற்றிக் கவலைப்படுகிறோம், அதனால்தான் நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லும் வீணாய்ப்போன அரசாங்கத்தைக் குறை கூறுகிறோம்.
ஆரிஸ்46: நாங்கள் எதற்குப் போய்ச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும், இங்கு நடப்பது உலகத்துக்குத் தெரியாதா என்ன.
இங்கிருந்து குடிபெயர்ந்து சென்ற மில்லியன் கணக்கான மலேசியர்கள் எது தங்களை நாட்டை விட்டுத் துரத்தியது என்பதை உலகத்தாருக்குச் சொல்லி இருப்பார்கள், ஐயா.
ஓடின்: ஷஹிடான், சக பிஎன் அரசியல்வாதிகள்போலவே உங்களுக்கும் மேல்மாடி காலி என்பதைக் காண்பித்துக் கொண்டிருக்கிறீர்கள். மலேசியா வேறு உங்கள் அரசாங்கம் வேறு.
எந்த மலேசியரும் மலேசியாவைக் குறை சொல்ல மாட்டார்.
ஆனால், ஒழுங்கீனச் செயல்களைச் செய்யும் அரசாங்கத்தைக் குறைகூறுவது ஒழுக்கக்கேடு ஆகாது.
நெகாராவான்: அம்னோவின் பேராசையின் காரணமாகவும் திறமையின்மையின் காரணமாகவும் மலேசியா தோற்றுப்போன நாடாகி விட்டது. நாட்டைப் பற்றிப் “பொல்லாங்கு பேசுவதாக” வேறு யாரையும் குற்றம் சொல்ல வேண்டாம். அம்னோவே அதைச் சிறப்பாக செய்து வருகிறது.
சுதந்திரமான நியாயமான தேர்தல்: ஷஹிடான் அவர்களே, முதலில் உங்கள் பிஎன் அரசாங்கத்திடம் நம் ஜனநாயக முறைக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுக்கச் சொல்லுங்கள்.
எனக்கு மலேசியாவைப் பிடிக்கும். பிஎன்னையும் அதன் இனவாதத்தையும்தான் பிடிக்காது.
பெயரிலி #06188481: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர்தான் சொன்னாரே, போரில் எல்லாமே நியாயம்தான் என்று. அப்புறம் ஏன் இந்த அங்கலாய்ப்பு?
பிஎன்தான் பக்காத்தான்மீதும் சில என்ஜிஓகள்மீதும் போர் தொடுத்துள்ளதே.
சமரசவாதி: அதேபோல், அரசாங்கத்தின் சார்பில் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுவதும், சிறுபான்மையினரை ஒடுக்கிவைத்து அவர்களின் உரிமைகளை மறுப்பதும், கையூட்டு வாங்குதும் கொடுப்பதும், “சேவைக் கட்டணம்” என்ற பெயரில் ரிம500 மில்லியன் கொடுப்பதும்கூட ஒழுக்கக்கேடான செயல்கள்தான்.
டாக்: வெளிநாடுகளுக்குச் செல்லும்போது மலேசியா, இயற்கைப் பேரிடர் இல்லாத அழகான நாடு என்று புகழ்ந்துரைப்பது என் வழக்கம்.
இங்குள்ள ஒரே பேரிடர், அம்னோ-பிஎன் நாட்டை ஆள்வதுதான்