எம்எச்370: மேலும் மின் துடிப்பொலிகள் கிடைத்துள்ளன

hostonவார  இறுதியில்  பதிவுசெய்து  பின்  காணாமல்போன  மின் துடிப்பொலிகள்  நேற்று  மீண்டும்  கிடைத்ததாக  ஆஸ்திரேலிய  ஒருங்கிணைப்பு  மையம்  கூறியுள்ளது.

சனிக்கிழமை (ஏப்ரல் 5) கிடைத்த அந்தத்  துடிப்பொலிகள்  திங்கள்கிழமை  கிடைக்கவில்லை. ஆனால், நேற்று  அதே  பகுதியில்  மீண்டும்  இரண்டு  துடிப்பொலிகள்   கிடைக்கப்பெற்றன. இவை,  கடலுக்கடியில் கிடக்கும்   விமானத்தின்  கருப்புப்  பெட்டி  அனுப்பி  வைக்கும்  சமிக்ஞைகளாக  இருக்கலாம்  என்ற  கருத்து  வலுவடைந்துள்ளது.

அந்த  “பிங்” துடிப்பொலிகளை  ஆராய்ந்து  பார்த்ததில்  அவை “இயற்கையில்  உருவாகும்  துடிப்புகள்  அல்லவென்பதும்  மின்கருவிகளால்  உருவாக்கப்படும்  துடிப்புகள்  என்பதும்” தெரிய  வருவதாக  ஒருங்கிணைப்பு  மையத்  தலைவர்  அங்குஸ்  ஹூஸ்டன்   கூறினார்.

ஆனாலும்,  அதை  வைத்து  காணாமல்போன விமானத்தைக்  கண்டுபிடிக்கப்பட்டதாகக்  கூற  அவர்  தயாராக  இல்லை.  தப்பான  தகவல்  கொடுக்கக்கூடாது  என்பதில்    எச்சரிக்கையாக  இருப்பதாய்  அவர்  சொன்னார்.

“துடிப்பொலிகள்  வருவது  மட்டுமே  கண்டறியப்பட்டுள்ளது.  அந்தக்  கடலுக்கடியில்  என்ன  உள்ளது  என்பது  எங்களுக்குத்  தெரியாது.

“இனி  துடிப்பொலிகள்  வரமாட்டா  என்ற  நிலை  ஏற்பட்டால்     சிறிய தானியங்கி  நீர்மூழ்கிக்  கப்பலைக்   கடலுக்கடியில்  அனுப்புவோம்”, என  ஹூஸ்டன்  மேற்கு  பெர்தில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.