நாடாளுமன்றத்தில் குழந்தைகள் கூட்டம்

babyஅரசாங்க  அலுவலகங்களில்  குழந்தைகள்  பராமரிப்பு   மையங்கள்  இல்லாமலிருப்பதை  வலியுறுத்த  பக்காத்தான்  நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  ஐவர்,  தங்கள்  குழந்தைகளை  இன்று  நாடாளுமன்றத்துக்குக்  கொண்டு  வந்தார்கள்.

இப்போது  நாடாளுமன்றத்தில்கூட  குழந்தை  பராமரிப்பு  மையம்  இல்லை  என டிஏபி-இன்  கூலாய்  எம்பி  தியோ  நை  சிங்  கூறினார். அவர்  தம்  இரண்டுமாத  குழந்தையுடன்  நாடாளுமன்றத்துக்கு  வந்திருந்தார்.

அவருடன்  புக்கிட்  மெர்தாஜாம்  எம்பி  ஸ்டீபன்  சிம்,  கிளானா  ஜெயா  எம்பி  வொங்  சென்,  தஞ்சோங்  எம்பி  இங்  வை  ஏய்க்,  புக்கிட்  பெண்டாரா  எம்பி  ஸைரில்  கீர்  ஜொஹாரி  ஆகியோரும்  கையில் குழந்தையுடன்   நாடாளுமன்ற  வளாகத்தில்  நடைபெற்ற செய்தியாளர்  கூட்டத்தில்  கலந்துகொண்டனர்.

“சில  வேளைகளில்  நாடாளுமன்றக்  கூட்டம்  இரவிலும்  நடக்கிறது. அப்போது  இரவில்  நெடுநேரம்   பிள்ளைகளைக்  குழந்தை  பராமரிப்பாளர்களிடம்  விட்டு  வைப்பது  சிரமமாக  இருக்கிறது”, என  தியோ  கூறினார்.