மதமாறிய தந்தை முன்னாள் மனைவியிடமிருந்து மகனைப் பறித்துச் சென்றார்

convertதம்  இரு  பிள்ளைகளைப்  பராமரிக்கும்  உரிமையை  இழந்ததால்  ஆத்திரமுற்ற  இஸ்வான்  அப்துல்லா,  தம்  ஆறு-வயது-மகனை  முன்னாள்  மனைவி  தீபிகாவிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்துச்  சென்றார்.

ஜெலுபுவில்  உள்ள  தீபாவின்  வீட்டிலிருந்து ஒரு  காரில்  தம்  மகனை  இஸ்வான்  கவர்ந்து  சென்றதாக  மகளிர்  உதவி  அமைப்பின்(WAO)  அதிகாரி  சேலி  வங்சாவிஜயா  கூறினார்.   தம்  முன்னாள்-கணவர்  கடந்த  ஆண்டு  மதம்  மாறியதை  அடுத்து  ஒன்பது-வயது-மகளையும்  மகனையும்  தம்  பராமரிப்பில்  வைத்துக்கொள்ளப்  போராடும்  தீபிகாவுக்கு  சேலி  உதவி  செய்து  வருகிறார்.

இஸ்வான்  தாம்  இஸ்லாத்துக்கு  மதமாறியது  மட்டுமல்லாமல் முன்னாள்-மனைவியின்  ஒப்புதலின்றி  பிள்ளைகளையும்  மதமாற்றம்  செய்திருக்கிறார்.

தீபிகா,  இச்சம்பவம்  குறித்து  சிரம்பான்  போலீஸ்  நிலையத்தில்  புகார்  செய்துள்ளார்.

அவரின்  வழக்குரைஞர்கள் இஸ்வான்,  முன்பு  என்.  வீரன்  என்ற  பெயரில்  அறியப்பட்டவர்,  நீதிமன்றத்  தீர்ப்பை  அவமதித்ததாக  நாளை  நீதிமன்றத்தில்  மனுச்  செய்வார்கள்.

திங்கள்கிழமை, அவ்விருவருக்கும்  மணமுறிவு வழங்கிய   சிரம்பான்  உயர்  நீதிமன்றம்  குழந்தைகள்  தாயின்  பராமரிப்பில்  விடப்பட  வேண்டும்  என்றும்  தீர்ப்பளித்தது.

ஆனால், இஸ்லாத்துக்கு  மதமாற்றம்  செய்யப்பட்ட  குழந்தைகளின்  நிலையில்  எந்த  மாற்றமுமில்லை.  அவர்களின்  மதமாற்றத்தை  இரத்துச்  செய்ய  தீபிகா  தனியே  வழக்கு  தொடர  வேண்டும்.