டிஏபி எம்பிகள் இருவர், துணைப் பிரதமர் முகைதின் யாசின் பெரும் பொருள் செலவில் 5-நாள் டூபாய் சுற்றுலா மேற்கொண்டிருப்பது தேவைதானா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். முகைதின், பயணத்தில் வேலை செய்வதைவிடவும் பெரும்பகுதி நேரத்தை கோல்ப் திடலில் செலவிடுவதுபோலத் தெரிகிறது என்றவர்கள் குறிப்பிட்டனர்.
புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீபன் சிம்மும், புக்கிட் பெண்டாரா எம்பி ஸைரில் கீர் ஜொஹாரியும், இணையத்தில் ஒருவர் வெளியிட்டிருந்த முகைதினின் 5-நாள் பயண நிரலை அடிப்படையாக வைத்து இவ்வாறு கூறினர்.
இப்பயணத்துக்கான பணத்தைச் செலவிடுவது யார் என்றும் எம்பிகள் வினவியுள்ளனர். “சிறப்பு விமானத்தில்” பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.
மலேசியாகினி துணைப் பிரதமரின் உதவியாளரைத் தொடர்புகொள்ள முயன்று வருகிறது.
பிரதமர் ஆனா பின்பு, எப்படி மக்கள் பணத்தை செலவு பண்ணுவதை இப்பவே பயிற்சியில் இருக்கிறார் !
மக்களே பாருங்கள் நம் நாட்டு தலைவர்களை.
சாரி..நான் ஒன்றும் கோல்ப் விளையாட போகவில்லை,பாயியையும் 2 தேங்காயையும் 1 மலேசியா போமோவையும் கூட்டிக்கிட்டுத்தான் போயிறுக்கிறேன்.திரும்பி வரும்போது நல்லசெய்தியோடதான் வருவேன்.வீணா என் பெயருக்கு களங்கத்தை உண்டாக்காதீர்கள்
10 மணி நேரம் துபாயில் பந்தையம் வைத்து கோல்ப் விளையாடுவார்கள். வேண்டியவரின் உதவி வேண்டி, எதிர்த்து விளையாடுவோர் காரணக் காரியத்துடன் தோற்பார். வெற்றிப்பனத்தை அங்கேயே வங்கியில் போட்டு விட்டு வருவார். இதுதான் அரசியல் பிரமுகர்களின் தற்கால கோல்ப் விளையாட்டு!. இதற்கு மக்கள் வரிப்பணம் கொடுத்து இவரைப் போன்றவரை விமானத்தில் வழி அனுப்பி வைக்க வேண்டும். எப்பேர்பட்ட அறிவாளிகள் இவர்களைப் போன்றவர்களை அரசாள்வதற்கு தேர்ந்தேடுத்திருக்கின்றார்கள் பார்த்தீர்களா!.
நாட்டுலே எவ்வளவோ பிரச்சினை இருக்குது, அதை விட்டுட்டு நானும் ஒரு வேலையில்லாத கேனையன்தான் என்பதை நிரூபிக்கிறார்.
தேவை தான்! பதவியில் இருக்கும் போதே துபாயில் ஒரு ‘துணை’ யைத் தேடி வைத்துக் கொண்டால் நல்லது தானே! நாளைக்குப் பதவி பறி போனால் மாமனார் வீட்டில் அடைக்கலம் கிடைக்குமே!
மந்திரிகளையும், அரசியல் தலைவர்களையும் நாமெல்லாம் கேள்விகேட்கக் கூடாதுங்க. தூபாய் என்ன முடிந்தால் பதவியில் இருக்கும் போதே , ஓசியில் அரசாங்க பணத்திலேயே உலகத்தையே சுற்றித் திரிவார்கள் ஏ ன்னா ? ஆட்சி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவங்க கையிலேங்க . நீங்களோ , நாங்களோ அவங்கள ஒன்னும் பண்ண முடியாதுங்க. மாமியார் உடைத்தால் மன்சட்டி, மருமகள் உடைத்தால் போன்சட்டிங்க . இவங்க செஞ்சா நியாயமான செலவுங்க அதையே அடுத்தவன் செஞ்ச வீண் விரயம்க . நியாயத்துக்கு எல்லாம் எங்கேங்க இருக்குது காலம். விட்டுத்தளுங்க ……………
“எங்கள் கையை நக்கு பவன் இருக்கும் வரை நாங்க இப்படிதான் பண்ணுவோம்”