காணாமல்போன மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடல் கடற்படைத் தளமான டியாகோ கார்சியாவில் உள்ளதாகக் கூறப்படுவதை அமெரிக்கா மறுத்துள்ளது.
“பிலிப் வூட்ஸ் என்னும் பயணி டியாகோ கார்சியாவிலிருந்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார் என்ற வதந்தியில் உண்மையில்லை….
“எம்எச்370 மாலைத் தீவு அல்லது டியாகோ கார்சியா-வுக்கு அருகில் பறந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை”, என கோலாலும்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பெயர் குறிப்பிடப்படாத பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக சினார் ஹரியான் கூறியுள்ளது.
“டியாகோ கார்சியா” சென்று உண்மை நிலவரத்தை கண்டு வருமாறு எந்த அமைச்சரை அனுப்பலாம் என்று நமது பிரதமர் முடிவு செய்ய முடியாமல் தலையை சொரிந்து கொண்டிருகிறாராம்.
எது எப்படியோ மக்கள் வரி பணத்தில் “டியாகோ கார்சியா” சுற்று பயணம் செல்லவிருக்கும் அந்த அதிர்ஷ்டக்கார அமைச்சர் யாரோ ??? அட தேவுடா !!!!!
இந்த செய்தி உண்மையா அல்லது வதந்தியா என்பது பிரதமர் அவர்கள் முடிவெடுக்க வேண்டும்.காலம் தாமதிக்காமல் உடனடியா செயல்பட வேண்டும் அரசாங்கம்.மக்கள் வெகு நாளாக காத்திருக்கிறார்கள் விமானம் என்ன ஆனது பயணிகள் என்ன ஆனார்கள் என்று.
அமரிக்கத் தூதரின் பேச்சை நம்பலாம். எனினும், எங்களின் விமானம் என்னவானது? ஒரு மாத காலமாகியும் முழுமையான தகவல் கிடைக்கவில்லையே!
விமானம் காணமல் போன உள்நோகம் என்ன?