அஸ்மின் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்

azminபிகேஆர்  துணைத்  தலைவரும்  கோம்பாக்  எம்பியுமான  அஸ்மின்  அலி  இன்று  நாடாளுமன்றத்திலிருந்து  வெளியேற்றப்பட்டார். நீதிபதிகளைக்  கண்டிக்கக்  கோரி  தாம்  கொண்டுவந்த  தீர்மானம்  மீது  விவாதம்  நடத்துவதைத்  துரிதப்படுத்தாதது  ஏன்  என்பதற்கு  விளக்கம்  தேவை  என்று  விடாமல் கோரிக்கை  எழுப்பிய  அவரை  அவைத்  தலைவர்  பண்டிகார்  அமின் மூலியா  வெளியேற்றினார்.

முன்னதாக,  பண்டிகார்  அரசாங்க  விவகாரங்களுக்கே  முன்னுரிமை  என்று  கூறி  இருந்தார். அப்படியானால்  63  எம்பிகள்  கையெழுத்திட்ட  தமது தீர்மானத்தைவிட  தனிப்பட்ட  எம்பிகள்  கொண்டு  வந்துள்ள  மற்ற  தீர்மானங்கள்  விவாதப் பட்டியலில்  முன்வரிசையில்  இடம்பெற்றிருப்பது  ஏன்  என்று  அஸ்மின்  வினவினார்.

அதனைத்  தொடர்ந்து   சில நிமிடங்களுக்கு  இருவரும்  சர்ச்சையிட்டுக்  கொண்டனர்.  சர்ச்சைக்கு முடிவுகட்ட  விரும்பிய  பண்டிகார்   அதிகாரத்தைப்  பயன்படுத்தி  அஸ்மினை  அவையிலிருந்து  வெளியேற்றினார்.