நீரின் அளவு குறைவதால் நெருங்கும் நெருக்கடி

emergencyசிலாங்கூர்  நீர்  மேலாண்மை நிறுவனம் (லுவாஸ்), அணைக்கட்டுகளில், 1998-இல்  இருந்ததைவிட  நீரின்  அளவு  குறைந்து  வருவதால் “நீர் நெருக்கடி  உருவாகும்  சாத்திய  நிலையை”  எதிர்கொள்ளத்  தயாராகி  வருவதாக  த  ஸ்டார்  அறிவித்துள்ளது.

அதன்  தொடர்பில்  தேசிய  நீர்சேவை  ஆணைய(ஸ்பான்)த்துடன்  பேச்சு  நடத்தி  வருவதாகக்  கூறிய  லூவாஸ்  இயக்குனர்  முகம்மட்  கைரி  செலாமாட், “இன்னும்  அந்தக்  கட்டத்தை  அடையவில்லை”  என்பதையும்  வலியுறுத்தினார்.

மழை  பெய்தும்கூட கிள்ளான்   பள்ளத்தாக்குக்கு  நீரை வழங்கும்  அணைக்கட்டுகளில்   நீரின்  அளவு  குறைந்து  வருவதாகவும் இப்போதுள்ள  அளவு   80  நாள்களுக்கு  விநியோகம்  செய்வதற்கு  மட்டுமே  போதுமானது  என்றும்  முகம்மட்  கைரி  சொன்னார்.

எனினும்,  ஏப்ரல்  30வரை  மழை  பெய்யும்  என  எதிர்பார்க்கப்படுவதால்   அணைக்கட்டுகள்  நிறையும்  என  லூவாஸ்  எதிர்பார்க்கிறது.