சாபா கடத்தல்காரர்கள் ரிம36.4 மில்லியன் பிணைப்பணம் கோரினர்

1 kidnapகடந்த  வாரம், சாபாவில்  இரண்டு  பெண்களைக்  கடத்தியவர்கள்  500 மில்லியன்  பெசோ (ரிம36.4 மில்லியன்) பிணைப்பணம்  கேட்டிருப்பதாக  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார்.

ஏப்ரல்  2-இல், சிங்காமாத்தா  ஓய்வுத்தளத்தில்   சீன  நாட்டுச்  சுற்றுலா  பயணியான காவ்  ஹுவா  யானுடன்  பிலிப்பினோ  பணிப்பெண்ணான மார்சி  தரவானும்  கடத்தப்பட்டார்.  என்றாலும்,   கடத்தல்காரர்கள்   சீனப் பெண்ணுக்கு  மட்டுமே   பிணைப்  பணம்  கோரியிருப்பதாக  ஜாஹிட்டை  மேற்கோள் காட்டி  த  ஸ்டார்  ஆன்லைன்  அறிவித்துள்ளது.

“இடைத் தரகர்  என்று  கூறப்படும்  ஒருவருடன்  பேச்சு  நடத்த  எங்கள்  குழுவை  அனுப்பி  வைத்துள்ளோம்”, என  ஜாஹிட்  கூறினார்.

கடத்தல்காரர்கள்  கடத்தப்பட்டவர்களை  விடுவிக்க  பணம்  கேட்பது  வழக்கமான  ஒன்றுதான்.  ஆனால், இவ்வளவு  பெரிய  தொகை  கேட்பது  புதியதாக  இருக்கிறது.