துணைப் பிரதமர் அலுவலகம்: அது அதிகாரப்பூர்வப் பயணம், ‘கோல்ப்’ பயணமல்ல

dpmதுணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்   ஐந்து-நாள்  ‘கோல்ப்  விடுமுறை” மேற்கொண்டு  டூபாய்  சென்றார்  என்று கூறப்படுவதை அவரது  அலுவலகம்  மறுத்துள்ளது.  அவரது  பயண நிரலில்  அதிகாரத்துவப்  பணிகள்  நிறையவே  உள்ளன  என்று  அது  கூறிற்று.

துணைப்  பிரதமரின்  முகநூல்  பக்கத்தில்  நீண்ட  விளக்கம்  அளித்துள்ள  அது, டிஏபி  எம்பிகள்  ஸைருல்  கீர்  ஜொஹாரியும்  ஸ்டீபன்  சிம்மும்  ஒரு “வரைவு”  அட்டவணையை  வைத்துக்கொண்டு  அவ்வாறு  கூறி  இருக்கிறார்கள்  என்றது  தெரிவித்தது.

“அது  துணைப்  பிரதமரின்  டூபாய்  பயண அலுவல்  அட்டவணை  அல்ல. முன்கூட்டி  தயாரிக்கப்பட்ட  ஒரு  வரைவு. அது  இறுதிசெய்யப்படாத  ஒன்று.

“இறுதி  அட்டவணையில்  துணைப்  பிரதமருக்கு  நிறைய  அதிகாரத்துவப்  பணிகள்  இருக்கும்”,  என்று  அது  கூறியது.