ஷாபியை மீண்டும் வழக்காட அமர்த்தியிருப்பது பொதுப் பணத்தை விரயமாகும் செயல்

karpalசங்கப்  பதிவதிகாரிக்கு(ஆர்ஓஎஸ்)  எதிராக  டிஏபி  தொடுத்துள்ள  சிவில்  வழக்கில்  அரசுதரப்பில்  வாதாட  முகம்மட்  ஷாபி  அப்துல்லாவை  நியமித்திருப்பதன்  மூலமாக  சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி),  பொதுப்  பணத்தை  விரயமாக்குகிறார்.

 

தனித்  திறன்கள்  தேவை  என்ற  நிலை  இருக்குமானால்  இப்படிப்பட்ட  நியமனத்தைச்  செய்வது  நியாயமாக  இருக்கலாம்  என  மூத்த  வழக்குரைஞரும்  டிஏபி  முன்னாள்  தலைவருமான  கர்பால்  சிங்  கூறினார்.

“ஆர்ஓஎஸ்ஸுக்கு  எதிரான  இந்த சிவில்  வழக்குக்குத்  தனித்  திறன்கள்  தேவையில்லை.

“எனவே, வரி செலுத்துவோரின்  பணத்தில்  முகம்மட்  ஷாபி  அப்துல்லாவை  நியமனம்  செய்திருப்பது  தேவையற்றது. அதை  இரத்துச்  செய்ய  வேண்டும்”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  வலியுறுத்தினார்.