நீதிபதி: ஏஜிக்கு சட்ட விலக்கு உரிமை கிடையாது

agசட்டத்துறை  தலைவர் (ஏஜி) சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை பெற்றவர்  அல்லர்  என்று  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்  இன்று  தீர்ப்பளித்தது.

குற்றப்  புலன்  விசாரணைத்  துறை  முன்னாள்  இயக்குனர் ரம்லி  யூசுப்பும்  அவரின்  வழக்குரைஞர்  ரோஸ்லி  டஹ்லானும்  தொடுத்துள்ள  வழக்குகளை  இரத்துச்  செய்ய  வேண்டும்  எனச்  சட்டத்துறைத்  தலைவர்  அப்துல்  கனி  பட்டேய்ல்  செய்திருந்த  மனுவைத்  தள்ளுபடி  செய்த  நீதி  ஆணையர்  வசீர்  அலாம்  மைதின்  மீரா  இவ்வாறு  தீர்ப்பளித்தார்.

“முற்போக்கான  ஜனநாயக  சமுதாயத்தில்,  அரசுப் பணியாளர்களுக்கு  முழு  சட்ட விலக்கு  என்பதற்கே  இடமில்லை”,  என  வசீர்  அலாம்  கூறினார்.
அது  அதிகாரமீறல்களுக்கு  வழிகோலும்  என்றார்.