மகனைத் கடத்திச் சென்ற மதமாறிய தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போலீஸ் மறுப்பு

copsமகனைக்  கடத்திச்  சென்ற, முஸ்லிமாக  மதம்  மாறிய  தம்  முன்னாள்  கணவருக்கு  எதிராக எஸ்.தீபா  போலீசில்  புகார் செய்திருந்தாலும்  போலீஸ்  நடவடிக்கை  எடுக்காது. இரண்டு  நீதிமன்றங்கள்  குழந்தைகளைப்  பராமரிக்கும்  பொறுப்பைத்  தாயிடமும்  தந்தையிடமும்  ஒப்படைத்திருப்பதுதான்  இதற்குக்  காரணம்.

“இங்கு  இரண்டு  நீதிமன்றங்கள். ஒன்று  சிவில், இன்னொன்று  ஷரியா  நீதிமன்றம். இந்த  விவகாரத்தை  இரு  தரப்பும்(பெற்றோர்கள்)  பேசித்  தீர்த்துக்கொள்வதே  நல்லது  என  நினைக்கிறேன்.

“பிள்ளை  தந்தையிடம்தான்  இருக்கிறான்  என்பதால்  அவன் பாதுகாப்புப்  பற்றி  போலீஸ்   கவலைப்படவில்லை”, என இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

தீபா, பிள்ளைகளைப்  பராமரிக்கும்  உரிமையை சிவில்  நீதிமன்றத்திடம்  பெற்றதுபோல்  அவரின்  கணவர்  இஸ்வான்  அப்துல்லா  அதே  உரிமையை  ஷாரியா  நீதிமன்றத்திடமிருந்து  பெற்றிருக்கிறார்.