மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370-ஐத் தேடும்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் விமானத்தின் கருப்புப் பெட்டி இருக்கும் இடத்தை ஏறத்தாழ அடையாளம் கண்டுகொண்டதாக நம்புகிறார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பட் இன்று கூறினார்.
சீனாவின் வணிக மையமான ஷங்காய் நகரில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆனால், தேடும்பணியை ஒருங்கிணைக்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்துக்குத் தலைமை தாங்கும் அங்குஸ் ஹுஸ்டன், ஆகக் கடைசியாக செவிமடுக்கப்பட்ட துடிப்பொலி காணாமல்போன விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து வந்ததாக இருக்கும் சாத்தியம் இல்லை என்கிறார்.
“எம்எச்370-ஐத் தேடும்பணியில் எனக்குக் கிடைத்த தகவல்களில் புதிதாக எதுவும் இல்லை. கிடைத்தால் சொல்வேன்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
நீங்க எதை சொன்னாலும் கேட்கிறதுக்கு மலேசிய அரசாங்கதிடம் நிறைய கேனையன்கள் இருகிறார்கள் என்ற தைரியத்தில் பேசி கொண்டிருகிறீர்கள்.
எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம் !
என்ன விளையாடுறாங்கள …கருப்பு பெட்டின்னு சொல்லறாங்க,ஒலியுனு சொல்லறாங்க,கிட்ட வந்துதேன்னு சொல்லறாங்க,இத்தனை ஆயிரம் மயில சுருகித்டோம்னு சொல்லறாங்க இப்ப சாத்தியம் மில்லை என்று பதில்.
விமானத்தைத் தேடுங்கடானா கறுப்புப் பெட்டியைத் தேடுறாங்களாம்! ஏன்? மனுஷனுங்கள மீனு தின்னுட்டாக்கூட அவங்க கொண்டு போன ஒரு பொருளு கூடவா அம்புடல? இவன் தான் நம்மள ஏமாத்துறான்னா அவனும் சேர்ந்து இப்ப நம்ம ஏமாத்துறான்! அதுக்குத்தான் ஆஸ்த்ரேலியா போனாரோ நம்ம சீபு!
இது ஒரு சினிமா :
தலைப்பு : MH 370
Direction : மலேசியா பிரதமர்
தயாரிப்பு : மலேசியன் Corporation
தயாரிப்பு மேற்பார்வை : DCA
கதாநாயகன் : ஆஸ்திரேலியா
உலக திரை அரங்குகளில் வெற்றி நடை போடுகொண்டிருக்கிறது