அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா மீண்டும் மலேசியாகினிமீது குற்றப்பத்திரிகை வாசித்துள்ளது. அந்த இணையச் செய்தித்தளம் அதன் சந்தாதாரர்களின் கருத்துக்களைத் தணிக்கை செய்யாமல் அப்படியே போட்டு விடுகிறதாம்.
மலேசியாகினியைக் குற்றம்சொல்லி நீண்ட கட்டுரை வரைந்துள்ள அதன் ஆசிரியர்களில் ஒருவரான சுல்கிப்ளி பக்கார், அவ்விணையத் தளம், அதன் “மாற்றணி-ஆதரவு” வாசகர்கள் எப்படிப்பட்ட கருத்துக்களையும் “கட்டுப்பாடின்றி” பதிவுசெய்ய இடமளிக்கிறது என்றும் வாசகர்களின் கருத்துக்களுக்கு தான் பொறுப்பில்லை எனப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது என்றும் கூறினார்.
“அக்கருத்துக்கள் சமூகத்துக்கும் நாட்டுக்கும் தீங்கு விளைக்குமா என்பதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். இதைத்தான் சுதந்திரம் என்று கூறிக்கொள்கிறது மலேசியாகினி”, என்றவர் சாடினார்.
கருத்துக்களுக்கும் தனக்கும் பொறுப்பில்லை என்று போட்டுக்கொள்வது மலேசியாகினி “பொறுப்பற்றது” என்பதைக் காண்பிப்பதாக சுல்கிப்ளி கூரினார்.
எங்கள் ஊரான பெட்டாலிங் ஜெயாவில் இரண்டு நாட்களுக்கு தண்ணீர் வரும், பிறகு இரண்டு நாட்களுக்கு வராது. கழிவறையிலும் தண்ணீர் தட்டுப்பாடு. ஆஹா! அருமையான யோசனை, குண்டி துடைக்க பழைய உத்துசான் காகிதங்கள் பயன்படுமே!
மக்களின் உணர்வுகளை எப்படி வெளிபடுத்துவது ? சொன்னா
பேப்பர்ல போடமாட்டானுங்க.
சைத்தான் வேதம் ஓதுகிறது!
உத்துசான் பொறுப்பற்ற ஊடகம் என மக்கள் சொல்லுகிறார்கள் …
உண்மையை சொன்னா எப்படி உத்துசான் பிரசனை வரும்,அது தப்பு செய்தவனுகுதான் பிரசனை அப்புறம் ஏன் உத்துசான் நீங்க கவலை படறிங்க.மக்கள் எதிர் பார்ப்பது உண்மை,நீதி,நேர்மை புரிகிறதா உத்துசான் .மலேசியா கினி நீங்கள் செய்வது சரி உங்கள் பயணம் நிருதாதிர்கள் .மலரட்டும்
BN அரசாங்கத்தின் பொறுப்பற்ற போக்கினால்தான் MH 370 விமானம் கடத்தப்பட்டதா ? அல்லது காணாமல் போனதா ? என்பது பற்றி BN அரசாங்கத்தின்பொறுப்பற்ற ஆதரவு பத்திரிக்கையான உத்துசான் பொறுப்பற்ற BN அரசாங்கத்தின் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வரை பேட்டி கண்டு பொறுப்பற்ற செய்திகளை வெளியிடலாமே !!!!!!