மதமாற்ற விவகாரத்தில் நஜிப் முடிவெடுக்க வேண்டும்

najibபிள்ளைகளைப்  பராமரிக்கும்  உரிமை  தொடர்பில்  சியாரியா  நீதிமன்றமும்  சிவில்  நீதிமன்றமும்  முரண்பாடான  உத்தரவுகளை  வெளியிட்டிருப்பதால்  நடவடிக்கை  எடுப்பதற்கில்லை  என  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  கூறிவிட்ட  நிலையில்   இனி,  இவ்விவகாரத்தில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்தான்  ஒரு  நிலைப்பாட்டை  மேற்கொள்ள  வேண்டும்  என்கிறார்  அரசமைப்புச்  சட்ட  நிபுணர்  அப்துல்  அசீஸ்  பாரி.

தீபாவின்  குழந்தைகளைப்  பராமரிக்கும்  உரிமையை   சிவில்  நீதிமன்றம்  தீபாவுக்கும்.  சியாரியா  நீதிமன்றம்,  அதை  மதம்  மாறிய  அவரின்  முன்னாள்-கணவர்  இஸ்வான்  அப்துல்லாவுக்கும்  கொடுத்துள்ளது  பற்றி  அவர்  கருத்துரைத்தார்.

“இரண்டு  உத்தரவுகள்  இருப்பதாக   போலீஸ்  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  சொன்னது  சரிதான்.

“மதமாற்றத்தால்  எழுந்துள்ள  குழப்பத்துக்கு  நஜிப்  நிர்வாகம்தான்  ஒரு  முடிவு  காண  வேண்டும்”,  என்றவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.