எம்எச்370 ஆறு நாள்களாக கருப்புப் பெட்டியிலிருந்து எந்த சமிக்ஞைகளும் இல்லை. ஆனாலும், விமானத்தைத் தேடும்பணி நிற்கவில்லை.
12 விமானங்களும், 15 கப்பல்களும் 47,644 சதுர கிலோமீட்டர் பரப்பில் தேடும்பணியைத் தொடர்கின்றன.
கருப்புப் பெட்டியின் மின்கலங்கள் செயலிழந்து சமிக்ஞைகள் வெளியிடப்படுவது அடியோடு நின்று போனால் அடுத்து என்ன நடக்கும்?
வேறு வகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார் அமெரிக்கக் கடல், வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை அறிவியலாளர் சில்வியா எர்ல்.
Bluefin-21 எனப்படும் சோனார் கருவி பொருத்தப்பட்ட தானியங்கி சிறு நீர்மூழ்கி ஒன்று கடலுக்கடியில் அனுப்பப்படும்.
“அது மெதுவாகத்தான் நகரும். ஆனாலும், அங்குள்ளதை ‘கிட்டத்தட்ட ஒரு படம்போன்ற” பிம்பங்களாகக் காண்பிக்கும்”, என்றவர் கூறியதாக சிஎன்என் அறிவித்துள்ளது.
கடலடியில் விமானத்தின் பகுதிகள் இருப்பது உறுதியாக தெரிந்தால் தொலைவிலிருந்து இயக்கப்படும் வாகனங்கள் அனுப்பப்படும்.
ஒன்றும் இல்லாத இடத்தில் ஒன்று கூடி கும்மி அடிக்கிறார்களோ என்று தோன்றுகிறது!
“பிங் ஒலி” நின்ற பின்னர் இப்பொழுது “பொங் ஒளியை” தேடுகின்றனர். அப்பொழுதுதான் “பிங்பொங்” (PING PONG) ஆகும். இவர்கள் தேடும் பனியின் செய்தியை கேட்டு, கேட்டு காது செவிடாச்சி.