தம் பிள்ளைகளின் மதமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் எஸ்.தீபா. கடந்த வாரம் சிரம்பான் உயர் நீதிமன்றம், பிள்ளைகளைப் பராமரிக்குக் பொறுப்பைத் தம்மிடம் ஒப்படைத்தபோதுக்கூட அவருக்கு இந்த எண்ணம் வரவில்லை.
ஆனால், முன்னாள் கணவர் இஸ்வான் அப்துல்லா, தம் ஆறு-வயது மகனைக் கடத்திச்சென்றதை அடுத்து பிள்ளைகளின் மதமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று உறுதிபூண்டிருப்பதாக தீபா மலேசியாகினியிடம் கூறினார்.
“18 வயாதான பின்னர் எந்தச் சமயத்தில் இருப்பது என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். நான் இஸ்லாத்துக்கு எதிரி அல்ல. என் குடும்பத்தில் முஸ்லிம்கள் உண்டு”, என்றாரவர். தீபாவின் தாயார், சித்தி ஆய்ஷாவும் இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்தான்.
குடும்பமே சரி இல்லை போல இருக்கு…..!!!
ம இ கா வெறும் களிமண் . அதனால் ஒன்றும் செய்ய முடியாது .
ஆனால் அம்னோ வால் முடியும். இது தான் 1 மலேசியா .
என்ன இது ஒரு முஸ்லிம் மற்ற மதம் மாறமுடியாது ஆனால் மற்ற இனம் முஸ்லிம் ஆக மாறலாம் ஆனால் திரும்பவும் போகமுடியாது .
கோளாறு தாயிடமா அல்லது ஒட்டுமொத்த குடும்பத்திடமா என்று யோசிக்கத் தோன்றுகிறது…..
லாயின் காலி காலாவ் அடா மசாலா யாங் தா போலே செலெசாய் மசூக் இஸ்லாம்.ஹா ஹா ஹா,நாராயண நாராயண.