எம்எச்370: கடலடியில் தேடும் நேரம் வந்தாயிற்று

bluefinதேடும்பணியை  ஒருங்கிணைக்கும் கூட்டு  நிறுவனத்தின்  தலைவர்  அங்குஸ்  ஹூஸ்டன்,  இன்று  பெர்த்தில்  செய்தியாளர்  கூட்டத்தில்  பேசினார்.

புதிதாக  சமிக்ஞைகள்  எதுவும்  கிடைக்காததால்  இதற்குமுன்  கிடைத்த  நான்கு  பிங்  ஒலிகள்தான் “எம்எச்370-ஐத்  தேடும்  பணியில்  முக்கிய  தடயங்களாக  அமைகின்றன”  என்றும்  அவற்றை  வைத்துதான்  பணியைத்  தொடர  வேண்டும்  என்றும்  சொன்னார்.

இப்படிப்பட்ட  நிலையில்,  “கடலுக்கடியில்  செல்லும்  நேரம்  வந்தாயிற்று”,  என்றாரவர். ஒஷன்  ஷீல்ட்  கப்பல்  பிங்  ஒலிகளின்  இருப்பிடத்தைக்  கண்டுபிடிக்கும்  வேலையை  நிறுத்திக் கொள்ளும்.  அதற்குப்  பதிலாக  சிறிய  தானியங்கி  நீர்மூழ்கிக்  கலம்  ஒன்று  கடலடியில்  தேடும்பணியை மேற்கொள்ள  அனுப்பி  வைக்கும்.

இந்தக்  கடலடி  தேடும்பணி  “மெதுவான, கடினமான”  பணியாகும்  என்றவர்  எச்சரித்தார்.