இஸ்லாமிய என்ஜிஓ-கள்: மகனைத் தூக்கிச் சென்றது கடத்தலாகாது

ngoஇஸ்லாத்துக்கு  மதமாறிய  ஒரு  தந்தை,  தம்  மகனை  முன்னாள்  மனைவியிடமிருந்து  தூக்கிச்  சென்றது  கடத்தல்  அல்ல  என்று  நெகிரி  செம்பிலான்  இஸ்லாமிய  என்ஜிஓ-கள்  கூட்டமைப்பு ஒன்று  கூறியது. ஷியாரியா  நீதிமன்றம்  பிள்ளைகளைப்  பராமரிக்கும்  உரிமையை  இஸ்வான்  அப்துல்லாவுக்குக்  கடந்த  ஆண்டு  வழங்கியுள்ளது,  அதனால்தான்  அவர்  தம்  ஆறு-வயது  மகனைத்  தூக்கிச்  சென்றார்  என்று  அது  கூறிற்று.

சிவில்  உயர்  நீதிமன்றம்,  கடந்த  திங்கள்கிழமை  பிள்ளைகளைப்  பராமரிக்கும்  பொறுப்பை  ஒரு  இந்துவான  அவரின்  முன்னாள்  மனைவி   எஸ்.தீபாவுக்கு  வழங்கியது.   ஆனால், அந்நீதிமன்றம், ஷியாரியா  நீதிமன்றம்  இஸ்வான்  அப்துல்லாவுக்கு  கொடுத்த  உரிமையை  இரத்துச்  செய்யவில்லை  என்று  அந்த  என்ஜிஓ-கள்  கூறிக்கொண்டன.

“ஏப்ரல்  7-இல்  வழங்கப்பட்ட உயர்  நீதிமன்றத்  தீர்ப்பு  ஷியாரியா  நீதிமன்ற உத்தரவை  இரத்துச்  செய்யவில்லை. அது இன்னும்  அமலில்  உள்ளதாக  இஸ்வான்  நம்புகிறார்”, என  இஸ்லாமிய  என்ஜிஓ-கள்  கூட்டமைப்பின்  செயலாளர்  ஷம்சுல்  அஸ்ஹார்  யஹ்யா  கூறினார்.